திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக
கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு எடுத்துக்காட்டிய அரசியல் ஆசான் மறைந்த அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் முன்னிலையில் சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 70 அடி கொடிமரத்தில் கழக கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், சபியுல்லா மாநில அணி நிர்வாகிகள்
கவிஞர்சல்மா செந்தில் பகுதி கழகச் செயலாளர் மோகன் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை
வாட்ஸ் அப் மூலம்
அறிய… https://chat.whatsapp.com/IpuT
LRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும்
அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments