தமிழ்நாடு சுற்றுலா துறையின் மூலம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருகை குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாடு வெளிநாடு என தமிழகத்திற்கு சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிகை குறித்த தரவுகளில் திருச்சிக்கு மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 2 கோடி சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோனார் கோவில்களுக்கு வந்த ஆன்மீக சுற்றுலா பயணிகள் ஆவார். மேலும் தென் தமிழகத்திற்கு மட்டும் 18 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கிறது.
இதனால் ஆன்மீக தலங்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கூடுதல் செயல்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments