தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகளில் துணிச்சலுடன் பணியாற்றும் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் அண்ணா பதக்கம் பெறுவதற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களுடன் 106 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அண்ணா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வெண்கல பதக்கமும், ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படும்.
பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் திருச்சி மாவட்டத்தில் பல குற்ற செயல்களை தடுத்து வரும் இவருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments