Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பெண்கள் உள்ளாடைகளை அணிந்து ஆபாசமாகவும், அறுவருக்கதக்க வார்த்தைகளை பேசி வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் செல்வி. பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பணி செய்து வரும் நிலையில், நேற்று (18.09.2024) Instagram வலைதளத்தை gana_gowtham_puchi_katra_thali 6768) Instagram ID-6 பயன்படுத்தி வரும்

பெயர் தெரியாத நபர் பெண்கள் அணியும் உள்ளாடைகளை போட்டுக் கொண்டு திரைப்பட பாடலை திருத்தி பாலியல் சம்பந்தமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும். ஆபாசமாகவும் அறுவருக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்தியும் பல வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இவர் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அந்த வீடியோவை பார்க்கும் நபர்களின் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் உள்ளது. மேலும், இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பரப்புவதால் அதனை பார்க்கும் நபர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கேலி கிண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மேற்குறிப்பிட்ட Instagram ID-யை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தியும், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் உடல்ரீதியாகவும். அநாகரிகமாக அறுவருக்கதக்க வகையிலும் வீடியோக்கள் வெளியிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்படி பெண் காவலர் செல்வி, பிரத்தி என்பவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்ற στ. 75(1) (iv), 79, 296 BNS r/w 4 of TNPWH Act and 67 IT Act and 4 and 6 Indecent Representation of Women Act ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கின் எதிரியை கைது செய்ய திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண் குமார், உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு எதிரியை தேடப்பட்டு வந்த நிலையில், எதிரி கௌதம் (24), த.பெ. அகிலன், கொத்தமாடிகுப்பம், மேல்பட்டி குடியாத்தம் வேலூர் என்பவரை இன்று (19.09.2024) காலை கைது செய்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.

மேலும் மேற்படி நபர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு பயன்படுத்திய அவரது Instagram ID யினை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *