திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சிறுவயதில் இருந்து வசித்து வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், அதன்பின் வாகனங்கள் பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்த இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்த இடத்தின் உரிமையாளர் இரண்டுசக்கர வாகனங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை ஸ்பாட்டிற்கே சென்று சரி செய்து வந்துள்ளார்.
இதனை பார்த்த அழகர்சாமி, இதே போல கார் பஞ்சரை சரி செய்யலாமே என்று தோன்றியதன் அடிப்படையில் ஆரம்பித்தது தான் இந்த ஸ்பாட் பஞ்சர் என தன்னுடைய தொழிலின் ஆரம்பத்தை பற்றி பேசுகிறார். ஆரம்பத்தில் வண்டியும் தேவையான பொருட்களும் தமிழ்நாட்டுல இருக்க நிறைய ஊர்களில் தேடிச்சென்று வாங்கி சேர்த்து வண்டில செட் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமா முக்கியமான பொருட்கள் அனைத்தையும் வண்டிலேயே செட் பண்ணுனேன், தண்ணி டேங்க் முதற்கொண்டு செட் பண்ணி ஸ்ரீரங்கத்தை சுத்தி எங்கனாலும் போய் பஞ்சர் ஆகி இருக்கும் வாகனங்களை சரி செய்து கொடுக்கிறார்.
அவசர நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் திருச்சியில் எங்கு பிரச்சனையாக இருந்தாலும் சென்று சரி செய்து கொடுக்கிறார். எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த தொழில் தான் தற்போது எனக்கான அடையாளம் என்பவர், பகல் இரவு என நேரத்தை பிரிக்காமல் வாடிக்கையாளர்கள் எப்போது கூப்பிட்டாலும் சென்று விடுவேன் என்கிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments