Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கூட்டணி கட்சியாக இருந்தாலும் பிரச்சனைகளை நாங்கள் துணிந்து பேசுவோம் – திருச்சியில் திருமாவளவன் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற உள்ளது. 

இதற்கான திருச்சி, கருர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல நிர்வாகிகள் மற்றும் மகளிர் விடுதலை இயக்க நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் தொல்.திருமாவளவன் தலைமையில் நிர்வாகிகள் பொதினிநிவளவன், தமிழாதன், பிரபாகரன், அன்பானந்தம், வேலுதமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநில துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ் எஸ் பாலாஜி, பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர் புலவர் எம்.ராமலிங்கம் மாநாட்டு விளக்க உரையை வழங்கினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய திருமாவளவன்….. இங்கு பேசிய பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம் குறிப்பிடும்போது மது ஒழிப்பு என்பது மிகச்சிறந்த மனித தர்மம் எனக் குறிப்பிட்டார். இந்த அரும்பணியை பெரும் பணியை செய்வது மானுட தர்மம் என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இப்படி பத்து பேர் பாராட்டு இருந்தால் இந்த செயலை ஊக்கப்படுத்தி இருந்தால் இதற்கு அரசியல் சாயப் பூசாமல் அனைத்து தரப்பு சார்ந்த கட்சி சார்பற்ற பொதுமக்கள் பலரும் இந்த களத்தில் கைகோர்த்து முன்வந்து இருப்பார்கள்.

இது பொதுவான பிரச்சனை இது ஒரு சமூகத்திற்கான பிரச்சனை அல்ல குறிப்பிட்ட கட்சிக்கான பிரச்சனை அல்ல தேர்தலுக்கு அரசியலுக்காக பேசப்படுகிற ஒன்று அல்ல சமூகப் பொறுப்போடும் தொலைநோக்குப் பார்வையோடும் மானுட தர்மத்தை நெஞ்சில் ஏந்தி முன்னெடுக்கிற ஒரு பணியாகும். இதை எல்லாம் புரிந்து கொண்டிருந்தால் ஊடகத் தளங்களில் முரண்பாடான கருத்துகளுக்கு

இடமில்லாமல் போயிருந்திருக்கும். எத்தனையோ சிந்தனை பழக்கம் உருவாகி இருக்கிறது என்றால் சிந்திப்பது கூட ஒரு வகையான பழக்கம்தான். சிலர் சாதி அடிப்படையில் சிந்தித்துப் பார்ப்பார்கள் சில எல்லாவற்றையும் மத அடிப்படையில் சிந்தித்துப் பார்ப்பார்கள் சிலர் எல்லாவற்றையும் பொருளாதார அடிப்படையிலே இது என்ன லாபம் இருக்கிறது என்று கணக்கு போட்டு சிந்திப்பார்கள் உறவுகளைக் கூட அப்படித்தான் சிந்தித்து பார்ப்பார்கள். மதுஒழிப்பு பிரச்சனையை பொது பிரச்சினையாக பார்க்கத் தெரியாத ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் ஒரு கருத்தை சொன்னால் அதை அரசியலாகத்தான் இருக்கும் என முன்பு முடிவு எடுத்துக் கொள்கிறோம். 

இப்போது நான் சிக்கலான புள்ளியில் நின்று கொண்டிருக்கிறேன் பலமுறை பல மேடைகளில் இது குறித்து நான் விளக்கம் சொல்லிவிட்டேன். மது ஒழிப்பை 100% தூய நோக்கத்தோடு அடிப்படையில் சமூகப் பொறுப்போடு தொலைநோக்கு பார்வையோடு விடுதலை சிறுத்தை கட்சியில் கையில் எடுத்திருக்கிறது என்று எத்தனை முறை சொன்னாலும் யார் காதிலும் அது போய் சேரவில்லை. இப்படித்தான் திருமாவளவன் கணக்கு போட்டார், இப்படித்தான் கணக்கு போட்டார் இப்படித்தான் காய்களை நகர்த்துகிறார் என்று அவர் ஒரு யூகங்களுக்கு அனுமானங்களை கணிப்புகளையும், கருத்துகளையும் அடுக்கிக் கொண்டே போகிறார்கள். அது வெவ்வேறு பரிமாணத்திற்கு கொண்டு போய் விட்டார்கள்.

பௌத்தரும், ஐயன் திருவள்ளுவரும் அதற்கு முன்பாக 500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர்கள் எல்லாம் சொல்வது மது அருந்தக் கூடாது இதை திருமாவளவன் கருத்தல்ல சிறுத்தைகளின் கருத்தல்ல வள்ளலால், புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் அதற்காக போராடிய காந்தியடிகள் தமது உயிர் மூச்சாக்க கொண்டு கடைசி வரை பேசி இருக்கிறார். அண்ணா தனது ஆட்சி காலத்தில் மதுவிலக்கு ரத்து செய்ய கோரிக்கை வைத்த போது அது முடியாது என்று தெரிவித்தார்.

ராஜகோபாலாச்சாரியார் பிராமண வகுப்பை சார்ந்தவராக இருந்தாலும் இந்த கவலை இருக்க வேண்டிய அவசியமில்லை சாதி அடிப்படையில் மட்டும் அவர் அணுகி இருந்தால் சிந்தித்து இருந்தால் மதுவிலக்கு குறித்து சிந்தித்திருக்க மாட்டார். சேலம் நகராட்சியின் தலைவராக இருந்த பொழுது தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே முதல் முதலாக மதுவிலக்கை அறிமுகப்படுத்தியவர் அவர்.

கூட்டணி கட்சியாக இருந்தாலும் பிரச்சனைகளை நாங்கள் துணிந்து பேசுவோம். இது சிறுத்தைகளின் வரலாறு ஈழத் தமிழர் பிரச்சினையாக இருக்கட்டும், வேங்கை வயல் பிரச்சனையாக இருக்கட்டும் அதற்காக போராடியவர்கள் சிறுத்தைகள். ஈழத் தமிழர்களுக்காக அதிமுகவோடு பயணித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள், ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து பயணிப்பது என முடிவெடுத்து அதன் கூட்டணியில் பயணித்தோம்.

ஆளுங்கட்சிக்கு நெருடலை தரக்கூடிய வகையில் நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை பிரச்சனைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டத்தில் நடத்துகிறோம் . ஆனால் சிலர் கூட்டணியை விட்டு வெளியே வா என பேசுகின்றனர். அவர்களுக்கு ஒர் கூட்டு பறவை கூட்டினை விட்டு நாங்கள் வெளியே வர வேண்டும் என்று கூட்டணியில் தொடர்வதா வெளியே வருவதா எந்த கூற்றில் இருப்பது எங்கே இருக்கக் கூடாது இப்படி முடிவெடுத்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அது எப்படிப்பட்ட பின்விளைகளை ஏற்படுத்தும் என்பதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் முடிவுகளை எடுக்க முடியும்.

எங்களது கோரிக்கை தொடக்கத்தில் இருந்து நான் சொல்லி வருகிறேன் ஒன்று தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு அதற்கான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் என்றார். கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இரா.கிட்டு திருச்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி அற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புச்செல்வம், புதுக்கோட்டை வழக்கறிஞர் வெள்ளைநெஞ்சன், இரா.தமிழ்ச்செல்வன், இளமதி அசோகன், கரூர் வழக்கறிஞர் புகழேந்தி, கராத்தே இளங்கோவன், குறிச்சி சக்திவேல்,

பெரம்பலூர் கலையரசன், வழக்கறிஞர் ரத்தினவேல், அரியலூர் இரா.கதிர்வேல், அங்கனூர் சிவா உட்பட மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கட்சி நிர்வாகிகளும், மகளிர் விடுதலை இயக்கத்தினரும் திரளாக பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *