புகையிலை மற்றும் குட்கா பான் மசாலா போன்ற போதை பொருட்கள் விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசின் உத்தரவை மீறி கடைகளில் விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடி வடக்கு மலை மற்றும் தெற்கு மலை, அண்ணா வளைவு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திருவெறும்பூர் வட்டார சுகாதார துறையின் கீழ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதானந்தம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கோபி, வில்லியம், சங்கர், சுந்தர், ஹரி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது தமிழக அரசால் புகை பிடிப்பது கெடுதல் என விளம்பர பலகை வைக்கப்படாத சுமார் 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments