திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் அழகிரிபுரம் டாஸ்மாக் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது மாலை 5:30 மணியளவில் அந்த போலீஸ் வேனை அப்பகுதியில் இருந்த ஒரு மீன் வியாபாரியால் அனைத்து கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் போலீஸ்சார் குவிக்கப்பட்டனர். வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. ஸ்ரீரங்கம் போலீஸ்சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். ஏற்கனவே இவருடைய கடை அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்தது அகற்றப்பட்டது. இந்நிலையில் இன்று தற்போது அப்பகுதி வேறு ஒரு ப்ரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடை அருகே போலீஸ்சார் வேனை நிறுத்தி உள்ளனர்.
அருகிலுள்ள டாஸ்மாக் கடை பிரச்னைக்கு பாதுகாப்புக்கு வந்த போது விக்னேஷ் போதையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் வாகனத்தின் கண்ணாடியை உருட்டு கட்டையால் உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார். போலீஸ்சார் விரைந்து வந்து அவரை பிடித்து காவல்நிலையத்திற்க்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவரது பழைய கடை அகற்ப்பட்டதற்க்கு போலீசார் காரணம் என்பதை மனதில் வைத்து கொண்டு இச்செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments