திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா மகாலில் செப்டம்பர் 20 முதல் 22ம் தேதி வரை உலக பணத்தாள்கள், நாணயங்கள் மற்றும் வரலாற்று பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள், மண்பாண்ட கருவிகள், சுடுமண் சிற்பங்கள், பழங்கால கல் ஆபரணங்கள், செம்பு, பித்தளை, வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் உலக அளவிலான பணத்தாள்கள் முதலியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நாட்டினருடன் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மேற்கொண்ட வாணிபத்தின் எச்சங்கள், ஓட்டை நாணயங்கள் முதல் தற்போது வரை வெளியிடப்பட்டுள்ள இந்திய நாட்டின் நாணயங்கள் சேகரிப்பாளர்களின் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர தீப்பெட்டி, ஸ்டாம்ப் மற்றும் பேருந்து டிக்கெட்டுகள் வரை பல வருடங்களாக சேகரிக்கப்பட்டு அவையனைத்தும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமன்றி பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் என பலரும் கண்காட்சிக்கு வந்து விவரங்களை சேகரித்து செல்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments