திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு போத்தீஸீல் பணிபுரிந்து வேலையிலிருந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும், ஒரு மனைவியும் உள்ளனர்.
நேற்று இரவு 11:30 மணியளவில் வீட்டில் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. தற்பொழுது உய்யக் கொண்டான் கரையோரமாக முட்புதரில் இருசக்கர வாகனமும் இவரும் எரிந்த நிலையில் உடல் கருகி நிலையில் கிடந்துள்ளார்.
போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையா? அல்லது தற்கொலையா? என்பது விசாரணை முடிவில் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments