நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஜம்புமடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்தாள் நாயுடு (59), தலம சாமி (57). இருவரும் இருசக்கர வாகனத்தில் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடைக்கு வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தை முத்தாள் நாயுடு ஓட்டியுள்ளார்.
அப்போது திருச்சி – நாமக்கல் சாலையில் வாழவந்தி சத்திரம் என்ற இடத்தில் மெயின் ரோட்டில் வந்தபோது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி இழுத்துச் சென்று தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த முத்தாள் நாயுடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த தலம சாமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அப்பகுதியினர் உதவியுடன் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர் பலமுறை இந்த இடத்தில் வேக கட்டுப்பாட்டிற்கு பேரி கார்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் நெடுஞ்சாலை துறையினர் பின்பற்றவில்லை என கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி – நாமக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் சாலை விபத்தில் பேருந்து சென்டர் மீடியாவில் சுமார் 300 மீட்டர் பயணித்து சென்று நின்றது. இந்த விபத்தில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்தாள்நாயுடுவின் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments