Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆப்ரேசன் அகழி – ரவுடிகளை தெறிக்க விடும் திருச்சி எஸ்.பி

திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வரவிருப்பதால், அப்பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பு விலை உயர்ந்து வருகிறது. இதனை பயன்படுத்தி அங்கு உள்ள நில உரிமையாளர்களிடம் கொட்டப்பட்டு செந்தில், சாத்தனூர் அண்ணாமலை இருவரும் நிலங்களை அபகரித்தும், மிரட்டியும் பொய் போலி பத்திரங்களை தயார் செய்வதும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டும், அதிக அளவு பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொட்டப்பட்டு செந்தில் மற்றும் அண்ணாமலை இருவர் மீதும் மிரட்டல் மற்றும் போலியாக நில பத்திரங்களை தயாரிப்பது. கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மணிகண்டம் காவல்நிலையத்தில் 133/24 u/s (191(2), 191(3), 296(b), 351(3) r/w 4 of WH Act & 25(1-B)(a) Arms Act-ன் படி வழக்கு பதிவு செய்து, மேற்படி கொட்டப்பட்டு செந்திலை பிடிக்க காவல்துறையினர் கைது செய்த போது, எதிரி தப்பியோடி கீழே விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் கடந்த (19.09.2024) மற்றும் (20.09.2024) ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற “ஆப்ரேசன் அகழி” சோதனையின் போது (20.09.2024)-ஆம் தேதி வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த TN 07 AM 4541 Skoda Octavia என்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில்,

காரின் உள்ளே அருவாள்-1, இரும்பு வாள்-2, இரும்பு ராடு 1 போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த ஆயுதங்களுடன், காரில் இருந்த திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த சந்திரமௌலி என்ற மௌலி (39) என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர் எனவும், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்தது. 

மேலும் மேற்படி சந்திரமௌலி மீது ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து வாத்தலை காவல் நிலையத்தில் 127/24 5.1. 132, 296(b), 351(ii) BNS r/w 25(a) Arms Act and 3 of PPDL Act ன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

3) ஆப்ரேசன் அகழியை தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளியும், இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து, கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும், பாண்டிச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும். கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது மாட்டு கொட்டகையில் இருந்து சுமார் 1 3/4 அடி நீளமுள்ள வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. மேற்படி கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரிய வந்தது.

இதுக்குறித்து திருவெறும்பூர் காவல்நிலையத்தில் 414/24 u/s 25(1A) Arms Act and 4(1)(c) TNP Act ன்படி வழக்கு பதிவு செய்து எதிரியை தேடிவந்த நிலையில், கடந்த (21.09.2024)-ஆம் தேதி பட்டரை சுரேஷின் மாட்டு கொட்டகையில் ஆயுதங்களுடன் இருந்த 1) கமல் (எ) குமார், கீழபாண்டமங்கலம், 2) ராமதாஸ், நவலூர் குட்டப்பட்டு ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.

மேலும் ஆப்ரேசன் அகழியில் தலைமறைவாக இருந்து வந்த எதிரிகளை தேடப்பட்டு வந்தபோது பட்டரை சுரேஷ் என்பவர் பாண்டிச்சேரியில் TN81 AY 1010 என்ற XUV 700 Mahindra காரில் திருச்சிக்கு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் இன்று (23.09.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் ஆப்ரேசன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்துவரும் எதிரிகளை தனிப்படை அமைத்து விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண்குமார், உதவி எண்.97874 64651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *