தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருச்சி கோட்டம் மூலம் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மார்சிங் பேட்டை,கொட்டக்கொல்லை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மிகவும் பழுதாகி சிதிலமடைந்து உள்ளதால் இக்குடியிருப்பு புதிதாக கட்டுவது தொடர்பாக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என். நேரு உத்தரவின் பேரில் மாநகராட்சி மேயர் அன்பழகன், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்
இம்மானுகுலேட் ராஜேஸ்வரி ,மாநகராட்சி உதவி ஆணையர் திரு.சண்முகம், இளநிலை பொறியாளர் மற்றும் மண்டல தலைவர் திருமதி. துர்கா தேவி ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
மேயர் மு.அன்பழகன் அப்பகுதியில் குடியிருப்பு உள்ள பொதுமக்களிடம் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் , தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளார். எனவே குடி இருந்த அனைத்து நபர்களுக்கும் ஒரு வருட காலத்திற்குள் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments