Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிஜேபி, RSS கண்டித்து காங்கிரஸ் சார்பில் விரைவில் மாநாடு – திருச்சியில் செல்வப் பெருந்தகை பேட்டி.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலை குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற நிலைகுழு தலைவரும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான செல்வப் பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். பின்னர் சாலை மார்க்கமாக நாமக்கல் சென்றடைந்தார்.

நாளை நடைபெற உள்ள நிலை குழு கூட்டத்திற்கும், நாளை மறுநாள் திருப்பூரில் நடைபெற உள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வப்பெருந்தகை…. கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து அவதூறுகளும், மிரட்டலும் விடுத்து வரும் பாசிச பாஜகவை கண்டித்து மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.

அதில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து ராகுல் காந்தியை பேசிவிடாமல் முயற்சி செய்கின்ற பாஜகவை கண்டித்தும், ஆர்எஸ்ஐ திட்டங்களை கண்டித்து மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பேட்டி குறித்த கேள்விக்கு….. அதற்கு அவர் பொதுச் செயலாளர் பதில் சொல்லி இருக்கிறார். அது அவர்களது உட்கட்சி பிரச்சனை காங்கிரஸ் இதில் தலையிட வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி எக்குக்கோட்டை போன்று வலிமையாக உள்ளது.

எங்களை பொறுத்தவரை எல்லோரையும் ஒற்றுமையாக இருந்து பாசிச சக்திகளை விரட்ட வேண்டும். தொடர்ந்து அவர்களே அவதூறு பரப்புவதை, பழிபடுவதை இல்லையென்றால் யாராவது இளித்த வாய்கள் கிடைத்தால் அவர்களை வைத்து களம் ஆடுவது பாசிசத்தை திணிப்பது போன்று திட்டமிட்டு வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதற்கு தேவை இருக்கிறது. தேவையான அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி தேசத்தை பாதுகாக்கப்பட வேண்டும். இதுதான் முதன்மையான அஜெண்டா வைத்து வேலை பார்க்கிறோம்.

இந்தியா கூட்டணியிலிருந்து ஒருவருக்கும் போக வாய்ப்பு இல்லை. மேலும் கூட்டணியின் கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக இருப்பார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி அவர்கள் எதை வேண்டுமானாலும் முடிவு செய்யலாம். உதயநிதி சிறப்பாக பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் வரலாற்றில் முதன் முதலாக இலவசமாக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வழங்கி உள்ளார். அவர் துணை முதல்வராக வருவது காங்கிரஸ் வரவேற்கிறது.

செட்யூல்டு மலைவாழ் மக்களுக்கு, OBC மக்களுக்கும் அரணமாக இருப்பது தலைவர் ராகுல் காந்தி மட்டும் தான், நாட்டு மக்கள் குரலாக இருக்கிறார் ராகுல் காந்தி. விஜய் வரவு திமுகவை பாதிக்குமா என்ற கேள்விக்கு?…. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மக்கள் மத்தியில் அதிருப்தி வரும் பிடிக்கவில்லை என்றால் எதிர்க்கட்சிக்கு போடுவார்கள். எது வேணாலும் நடக்கலாம். நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.

முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், காவல்துறையினர் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். இன்னும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக இயக்குனர் மோகன்ஜீ கைது குறித்த கேள்விக்கு?…. லட்டு பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். பஞ்சாமிர்தத்தை பற்றி கேள்விப்படவில்லை. கற்பனைக் எட்டாத அளவு அவர் பேசியுள்ளார் என தெரிவித்தார்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரெக்ஸ், வழக்கறிஞர் சரவணன், மகேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *