தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் 3 முறை எண்ணப்பட்டு வருகிறது. கோயிலின் மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
அப்போது கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 55 லட்சத்து, 95 ஆயிரத்து, 692 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 100 கிராம் தங்கமும், 3 கிலோ 100 கிராம் வெள்ளியும், 151 அயல்நாட்டு நோட்டுகளும், 855 அயல்நாட்டு நாணயங்களும் இருந்தன. இதே போல் இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் உண்டியல்களில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 362 ரூபாய், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில் உண்டியல்களில் 26 ஆயிரத்து 19 ரூபாய், போஜீஸ்வர் கோவில் உண்டியல்களில் 5 ஆயிரத்து 8 ரூபாயும் இருந்தன எனத் கோயிலின் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.
உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்
1. அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன்.
2. அ.இரா.பிரகாஷ், இணைஆணையர் / செயல் அலுவலர்.
3. பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்.
4. இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்.
5. சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர்.
6. ம.லெட்சுமணன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி
7. மு.அசனாம்பிகை, செயல் அலுவலர் நிலை-1, அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்
8. ம.ஜெயா, செயல் அலுவலர் நிலை-1, அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர்.
9. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்
10. நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்
11. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.
12. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments