இன்று ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டிசி பிரைட், ரோட்டரி கிளப் திருச்சி பட்டர்ஃபிளைஸ் உடன் இணைந்து, உலக ரேபிஸ் தினமான செப்டம்பர் 28 அன்று, “ரேபிஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பில் ஒரு படி முன்னேற்றம்” என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
திருச்சி சுப்பிரமணியபுரம், குண்டூர் மற்றும் கே.சாத்தனூர் ஆகிய 3 அரசு கால்நடை மருந்தகங்களுக்கு 300 டோஸ் ரேபிஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டன. இதன் மூலம் சிறப்பு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் வரும் செப்டம்பர் 28 சனிக்கிழமையன்று நடத்தப்படுகிறது.
இதன் மூலம் திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300 நாய்கள் மற்றும் பூனைகள் பயனடைகின்றன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments