திருச்சி மாநகராட்சியில் மண்டலம் 5-இல் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி தூய்மையே சேவை (Swachhata Hi Seva 2024 ) தலைப்பில் இன்று மாநகராட்சி, SR வேதா நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் தூய்மை பணியாளர்களுக்கு மக்கள் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், புற்று நோய் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மகளிர் & மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு & மூட்டு அறுவை சிகிச்சை, காசநோய் & நுரையீரல் சிகிச்சை, சிறுநீரகவியல் மருத்துவ சிகிச்சை, பல், தாடை & முகச்சீரமைப்பு சிகிச்சை, காது, மூக்கு தொண்டை மருத்துவம், கண் மருத்துவம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments