திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் நடைபெற்று. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 150க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடைபெற்றது.
இந்த முகாமில் 18 முதல் 35 வயது உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டு நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு…. மாணவர் பருவத்தில் இருந்து மிகவும் பொறுப்பான இடத்திற்கு செல்கிறீர்கள் .
ஆட்கள் வேலைக்கு தேவை என தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பார்த்து இருப்பீர்கள் ஆனால் வட இந்தியாவில் இது போன்ற அறிவிப்பு காண முடியாது. தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது 10000 பேருக்கான வேலைகள் உள்ளது ஆனால் 2000 பேர் தான் வேலைக்கு வருகிறார்கள் .
எனவே வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது ஆனால் ஆட்கள் குறைவாக உள்ளனர். இந்திய அளவில் பெண்கள் வேலைக்குச் செல்வது 18 சதவீதம் தான் ஆனால் தமிழகத்தில் 54 சதவீதம் உள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்கள் சதவீதம் இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிகம். தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வேலை என்பது நமது தொடக்கம் எனவே சம்பளம், தொலை தூரம் என கூறாமல் வேலைக்கு செல்ல வேண்டும் இது உங்களுக்கு அனுபவத்தை தரும் இந்த அனுபவம் வேறு ஒரு நிறுவனத்திற்கு செல்ல உதவும் என பேசினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments