Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உலக ரேபிஸ் தினம் – செல்லபிராணிகளை பாதுகாக்கப்பதற்கும் நம்மை பாதுகாத்து கொள்வதற்குமான விழிப்புணர்வு நாள்!!!

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களில் பல இடங்களில் நாய் கடித்தது என்ற செய்திகளை பரவலாக பார்த்து வருகிறோம், குழந்தைகளை, தெருவில் செல்பவர்களை, வீட்டில் வளர்க்கும் நாய்கள் கூட கடித்துவிடும் சம்பவங்களும், வெறிநாய் கடியினால் ஏற்படும் இறப்புகள் பற்றியும் கேள்விப்பட்டு வருகிறோம். நாய்களுக்கு ஏன் வெறி ஏற்படுகிறது.

உலகளவில் வெறிநாய் கடிக்கான தினத்தை இன்று கடைபிடிக்கும் நேரத்தில் ரேபிஸ் பற்றி விளக்குகிறார் கால்நடை மருத்துவர் Ganeshkumar……, உலகளவில் வெறிநாய் கடி தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்தவரான பிரெஞ்சு வேதியியலாளரும் நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டர் அவர்களின் இறந்த தினமான செப்டம்பர் 28 அன்று ஒவ்வொரு ஆண்டும் உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ரேபிஸ் என்பது லைசா ( Lyssavirus )ராபிடோ விரேடே என்ற குடும்பத்தை சார்ந்த வைரஸ் நாய்களை தாக்கும் போது அவற்றிக்கு வெறிப்பிடிக்கிறது. இந்த வைரஸ் தாக்கும்போது சாப்பிட தோன்றும் சாப்பிட முடியாது, தண்ணீர் குடிக்க தோன்றும் குடிக்க முடியாது.

அதே போல கண்கள் மங்கலாகி எதிரில் இருப்பவர்கள் யாரு என்று கூட தெரியாத சூழலில் வெறிபிடிக்கும். இப்படி வெறி பிடித்த நாய்கள் மனிதர்களை கடிக்கும் போதோ அவற்றின் எச்சில் காயத்தின் வழியாகவோ அல்லது கண்களின் வழியாகவோ உடலினுள் செல்லும்போது மனிதர்களுக்கும் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.

வெறிநாய் கடியும், நன்றாக சரியான முறையில் தடுப்பூசி போடப்பட்டு வளர்க்கப்படும் வீட்டு நாய் கடியும் ஒன்றல்ல. வெறிநாய் பொறுத்தவரை கடித்தவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம், ஆனால் வீட்டில் வளர்க்கும் நாய் சரியான முறையில் தடுப்பூசி போடபட்டு பராமரித்திருக்கும் நிலையில் உயிரிழக்கும் அபாயம் குறைவு, ஆனால் எந்த நாய் கடித்தாலும், கீறினாலும் உடனடியாக குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வரையிலும் ஓடும் நீரில் சோப் கொண்டு கடித்த இடத்தை கழுவிவிட்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தொடர்ந்து தடுப்பூசி அட்டவணையை பின்பற்றி தடுப்பூசி போட்டுகொள்வது முக்கியம்.

ரேபிஸ் நோயுற்ற ஒரு நாய் மற்றொரு விலங்கை கடிக்கும் பட்சத்தில் அது மற்ற விலங்குகளுக்கும் பரவி உயிரிழக்க நேரிடும். ஆடு மாடு இவற்றை கடிக்கும் போது அது அந்த விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் பூனை போன்ற வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை கடிக்கும் போது அவற்றால் மனிதர்களுக்கும் பிரச்சனை ஏற்படும். 

எப்படி தடுப்பது : ரேபிஸ் மற்ற பாலூட்டி விலங்குகளுக்கு ஏற்பட்டாலும் 90 சதவிகிதம் நாயினால் தான் பரவுகிறது. எனவே வீட்டில் வளர்க்கும் நாய் தான் என்றாலும் பிறந்த 40 நாள் தொடங்கி தொடர்ந்து அவற்றிற்கு தடுப்பூசி அட்டவணையை பின்பற்றி தடுப்பூசி போட வேண்டும். வருடம் ஒருமுறை இந்த அட்டவணை பின்பற்றபட வேண்டும்,அதற்கான தேதிகளை மருத்துவரிடம் கேட்டு குறித்து வைத்து போட்டு கொள்ளலாம். மேலும் தெருக்களில் இருக்கும் Indie Breed என்று சொல்ல கூடிய நாய்களை விலங்குநல ஆர்வலர்கள் மட்டுமின்றி நாய் வளர்க்க ஆசைப்படும் அனைவரும் தத்தெடுத்து வளர்க்கலாம், இதன் மூலம் அவை சரியான முறையில் பராமரிக்கப்பட்டு, தடுப்பூசியும் போடப்பட்டிருக்கும். இதனால் நாய் வெறி பிடிப்பது குறையும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *