தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து திருச்சியில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்டம் திமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
இதே போன்ற திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு மாநகர திமுக சார்பாக இன்று கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்வை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments