திருச்சி மத்திய பேருந்து நிலையம்! உறையூர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். இதில் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் ஹவாலா பணம் ரூ 32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உறையூர் பகுதியில் காவல் ஆய்வாளர் ராமராஜ் நடத்திய அதிரடி சோதனையில் தனியார் விடுதியில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணன் பிரபு இரண்டு பேரும் இந்த பணத்திற்கான கணக்குகளையும் தகவல்களையும் கொடுத்ததால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அவருடன் விசாரணை தொடர்கிறது.
கணக்கில் காட்டபடாத 32 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை வருமானவரித்துறை எடுத்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments