சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது உறவினர் குமார் என்பவருடன் காரில் நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். காரை சென்னை புழல் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
கார் துறையூர் அருகே உள்ள கிழக்கு வாடி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த வெங்கடேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் நாமக்கல்லை சேர்ந்த குமார் மற்றும் சென்னையை சேர்ந்த சூர்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவம் அறிந்த துறையூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments