Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முஸ்லிம்களின் சொத்துக்கள் திருட முயற்சிப்பது தடுக்கப்பட வேண்டும் – திருச்சியில் ஹைதர் அலி பேட்டி

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அந்த இயக்கத்தின் தலைவர் ஐதர் அலி தலைமையில் நடந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹைதர் அலி….. வக்ஃபு சட்டத்தில் ஏற்கனவே பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டே இரண்டு பெண்கள் வக்ஃபு வாரியத்தில் இரண்டு பெண்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கிற சட்டம் இயற்றப்பட்டது. தற்பொழுது தான் அவர்கள் ஏற்றியது போல் கூறுகிறார்கள் அது ஏற்கனவே நடைமுறையில் தான் உள்ளது.

பா.ஜ.க அரசு சட்டங்களை அவர்களுக்கு வசதியாக உருவாக்கி கொண்டுள்ளார்கள். வக்ஃபு திருத்த சட்டத்தை ஆய்வு செய்ய அது பாராளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த குழுவினர் நாடு முழுவதும் சென்று மக்களின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வந்த அந்த குழுவின் கள ஆய்வு செய்வது கூட முறையாக இல்லை. சட்டத்தை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்று மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள் தவிர முழு விளக்கங்களை கேட்பதில்லை.

வக்பு சொத்துக்கழ் என்பது அரசு சொத்து அல்ல முஸ்லீம்களால் வழங்கப்பட்ட சொத்து. ஏற்கனவே இனாம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வக்ஃபு சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் தற்பொழுது முஸ்லிம்களின் சொத்துக்களை முழுமையாக திருட குழுவில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சியில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் திருச்சியில் வக்ஃபு சொத்துக்கள் உள்ளது. 7900 ஏக்கர் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் தான் பெல், துப்பாக்கி தொழிற்சாலை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அதற்கு ஆண்டுக்கு ரூ.7500 வாடகை தருகிறார்கள். அதையெல்லாம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை.அரசு தன் தேவைக்காக எடுக்கும் வக்ஃபு சொத்துக்களை நாங்களே கொடுத்துள்ளோம். இந்த நிலையில் முஸ்லீம்களின் சொத்துக்களை திருடும் வகையில் பா.ஜ.க அரசு செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

சி.ஏ.ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் பலருக்கு இன்னும் அது ரத்து செய்யப்படவில்லை. அதனால் பலர் பாஸ்போர்ட் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என் உயிர் அரசின் விவகாரத்தில் கவனம் செலுத்தி சட்டமன்றத்தில் அறிவித்தது போல் முழுமையாக சி ஐ ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் படி தான் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இன்று என்கவுண்டர்கள் செய்யப்படுகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவரை கூட என்கவுண்டர் செய்கிறார்கள். இதை நீதிமன்றங்கள் கூட வேடிக்கை பார்க்கிறது. இதனை வேதனையோடு சுட்டிக்காட்டிகிறோம்.

வக்பு திருத்த சட்டத்தின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட வக்பு வாரியத்தில் இணையலாம் என்கிற அறிவிப்பு ஏற்கத்தக்க அறிவிப்பு அல்ல கோவில்களில் பிரசாதம் செய்வதற்கு கூட குறிப்பிட்ட சமூகத்தை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை ஆனால் முஸ்லிம்களின் சொத்துக்களை பராமரிப்பதில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் சினேமிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது முழுக்க முழுக்க முஸ்லிம்களின் சொத்துக்களை திருடவே இந்த சட்டத்தை பாஜக கொண்டுவந்துள்ளது

ஒரே நாடு ஒரே தேர்தல் என பாஜக கூறுகிறது ஆனால் ஒரே நாடாக இந்த நாடு இருக்க வேண்டும் என்கிற விருப்பம் பாஜகவிற்கு கிடையாது. வக்ஃபு வாரியத்தில் 127 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 37 ஊழியர்கள் தான் உள்ளார்கள். அதனாலே பல்வேறு குழப்பங்கள் நான் நடைபெறுகிறது. எது வக்ஃபு சொத்து என்பதை வருவாய் துறை தான் சர்வே செய்து தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் தான் திருச்செந்தூரை கோவில் உள்ள இடமும் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்பதை அவர்கள் அது தவறு என்றால் வருவாய் துறை தான் அதற்கு காரணம்

இனாம் ஒழிப்பு சட்டப்படி திருசெந்துறை கோவில் வக்பு இடம் என்பதிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதையும் முறையாக பதிவு செய்யப்படாததால் தான் தற்பொழுது பிரச்சனை ஏற்பட்டுள்ளது ஊழியர்கள் எண்ணிக்கை குறைவின் காரணமாகவே அந்த விவகாரங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. வகுப்பு திருத்த சட்டம் என்கிற பெயரில் முஸ்லிம்களின் சொத்துக்கள் திருட முயற்சிப்பது தடுக்கப்பட வேண்டும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *