அக்டோபர் – 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி மேல நாகமங்கலம் பகுதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 மற்றும் குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்தால் இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 பிரிவு 76 இன் படி சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments