திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலைக்கல்லூரி எதிரே செயல்படும் அரசு மதுபான கடையை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வைரவளவன் தலைமை வைத்தார்.
போராட்டத்தில் திருவெறும்பூர் ஐடிஐ எதிரில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையால், ஐடிஐ மாணவர்கள் மது பழக்கதிற்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்படுவதால் அரசு ஐடிஐ முன்பு உள்ள அரசுமதுபானக்கடை மற்றும் பாரை உடனடியாக மூட வேண்டும். அதேபோல் துவாக்குடி அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுபான கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி
இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், இன்று காலை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மாணவர் ஒருவர் மாலை அணிவித்து பிணம் போல படுத்துக்கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments