ஒவ்வோரு ஆண்டும் வன உயிரின வார விழா அக்டோபர் 2 முதல் 8 வரை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் இதை முன்னிட்டு திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் அண்ணா ஸ்டேடியம் முகப்பு பகுதியில் (08.10.2024) காலை 06:30 மணி அளவில் 3 கி.மீ தூரத்திற்கு சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.
இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பேரணியில் கலந்து கொள்பவர்கள் தங்களது விபரத்தினை 8667095032 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு திருச்சி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments