திருச்சி காவிரி பாலம் அருகில் உள்ள மெயின் ரோட்டில் KONCEPT_TURF எனும் உள் விளையாட்டு கிரிக்கெட் மற்றும் கால் பந்து அரங்கத்தை நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் தொண்டர்கள் கேட்டு கொண்டதற்கினங்க அமைச்சர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்வில் மாநகர மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா, சிந்தை பாலமுருகன், மத்திய மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் தென்னூர் ஜாவித்சிராஜ் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments