திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக திருச்சி எஸ்பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் எஸ்பி தனிப்படை போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டரில் சோதனை செய்த பொழுது மூன்று பெண்களை வைத்து மூன்று பெண்கள் விபச்சாரம் செய்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் ஆறு பேரையும் எஸ்பி தனிப்படையினர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தாசில்தார் செயப்பிரகாசம் முன்னிலையில் அந்த மசாஜ் சென்டருக்கு சீல் வைத்தனர். இது சம்பந்தமாக அந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் ஒரு கட்டிடத்தில் சினிமா துணை நடிகைகள் மற்றும் சில நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். இதனால் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பொது துறையை நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல ஊழியர்கள் தங்களது சேமிப்பு கணக்கை இழந்தார்கள் என்பது அப்போது பேசப்பட்டது.
அது தற்பொழுது இந்தப் பகுதியில் மீண்டும் இதுபோன்று விபச்சார வழக்கில் மூன்று அழகிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments