திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த உடையாபட்டியைச் சேர்ந்த சுப்பாயி உடையார் என்பவர் செவலூர் முனியப்பன் கோவிலுக்கு ஜல்லிக்கட்டு காளை வழங்கி உள்ளார். இந்த கோவில் காளை ஜல்லிக்கட்டு களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றது.
இந்நிலையில் அந்த காளை நேற்று காலை ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பலர் கலந்து கொண்டு போட்டி, போட்டு ஏலம் எடுத்தனர். ஏலம் ரூ.30 ஆயிரத்தில் தொடங்கி ரூ.90 ஆயிரத்தில் முடிவு பெற்றது. கல்கொத்தனூரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற வாலிபர் காளையை வாங்கினார். இந்த காளை விற்ற தொகையில் அந்த பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments