கடந்த (08.10.2024)-ம் தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் சந்தையில் ராதாகிருஷ்ணன் என்பவர் தனது மளிகைகடை முன்பு நிறுத்தியிருந்த TN 81 F 6230 HONDA SHINE என்ற இருசக்கர வாகனத்தை காணவில்லை என கொடுத்த புகாரின்பேரில் காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மயிலம் சந்தை மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், திருச்சி மாநகரம் முழுவதும் தொடர்ந்து வாகன தணிக்கை செய்து, எதிரியை தீவிரமாக தேடி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் உறையூர் மேலகல்நாயக்கன் தெருவை சேர்ந்த மகேந்திரன் (43) த.பெ.பால்ராஜ் என்பவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது, மேற்கண்ட இருசக்கர வாகனத்தை வழக்கின் மகேந்திரிடமிருந்து வழக்கு சொத்தான இருசக்கர வாகனமும் மற்றும் திருச்சி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் எதிரி மகேந்திரன் திருடிய 6 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 7 இருசக்கர வாகனங்கள்(மதிப்பு சுமார் ரூ.5,00,000/-) எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டு, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரியை விரைந்து கைது செய்தும், திருச்சி மாநகரில் திருடுபோன 7 இருசக்கர வாகனங்களை மீட்ட காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments