திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் ராயல் லயன்ஸ் சங்கம், ஈகை சிறகுகள் அறக்கட்டளை, ஸ்கோப் தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கிய மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்குவதற்கு குப்பை தொட்டிகள் மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்கான பக்கெட் ஆகியவைகளை தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார்கள்.
மத்திய பேருந்து நிலையத்தில் நடைபாதைகளில் பொதுமக்கள் குப்பைகள் போடுவதை தவிர்ப்பதற்காக மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் வைப்பதற்காக இரு வண்ண தொட்டிகள் வழங்கப்பட்டது
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வுக்காக துணிப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் துர்கா தேவி, உதவியாளர் சண்முகம், கலைச்செல்வி, புஷ்பராஜ், சுகாதார அலுவலர் வினோத் கண்ணா மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments