Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் – 5 தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி தெற்கு மாவட்­டச் செயற்­குழு கூட்­டம் மாவட்­டக் கழக அலு­வ­ல­கத்­தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட அவைத்­த­லை­வர் என்.கோவிந்தராஜன் தலை­மை­யில் நடை­பெற்றது.

இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி பார்­வை­யா­ளர்­ தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் தொண்டரணி அமைப்பாளர் கதிரவன் திருவெறும்பூர் தொகுதி தா.மணிராஜன் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணப்பாறை தொகுதி பார்வையாளர் டாக்டர் ஆர் அண்ணாமலை மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் ஆகியோர் அமைச்சரால் அறி­மு­கம் செய்து வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானத்தை ஒட்டி அமைச்சர் தனது உரையை நிகழ்த்தினார்.

தீர்மானம் -1 : கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமாகிய மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை கழக தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு துணை முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இச்செயற்குழு கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் – 2 : (09.11.2024), (10.11.2024) (23.11.2024), (24.11.2024) ஆகிய நான்கு தினங்களும் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் பாக முகவர்கள் அனைவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பாகங்களில் முகாமில் கலந்து கொண்டு இல்லம்தோரும் சென்று புதிய வாக்காளர்களை சேர்த்து 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கழக தலைவர் அவர்கள் அறிவுறுத்திய 200 இடங்களில் வெற்றி என்ற இலக்கை பெற கடுமையாக உழைத்திட இக்கூட்டம் வலியுறுத்திகிறது.

தீர்மானம் -3 : தலைமை கழகம் அறிவுறுத்தலின்படி, கழக வளர்ச்சிக்காக தலைமை கழகத்தால் வழங்கபட உள்ள இரசீது புத்தகத்தின் மூலம் திருச்சி தெற்கு மாவட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டம், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நிதி வசூல் செய்து அத்தொகையை மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் ஆகிய இருவரும் இணைந்து வங்கி கணக்கு துவங்குவது எனவும்,

வசூலாகும் தொகையை அந்த வங்கி கணக்கில் செலுத்திய பின்னர், ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அத்தொகையினை மாவட்ட கழக செயலளார் மற்றும் மாவட்ட பொருளாளர் இருவரும் இணைந்து தலைமை கழக வங்கி கணக்கிற்கு அனுப்பி வைப்பார்கள் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் – 4 : நாளது (01.09.2024) அன்று திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி சிந்தாமணி தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது பொது உறுப்பினர் கூட்டத்தை மாவட்ட மாநாடு போல் சிறப்புற நடத்தி நமது கழக தலைவர் அவர்களின் நன்மதிப்பையும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழக முதன்மை செயலாளர் மாண்புமிகு.கே.என்.நேரு அவர்களின் பாராட்டையும் பெற்ற

நமது மாவட்ட கழக செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. மாவட்ட பொது உறுப்பினர் கூட்டத்தினை தொடர்ந்து நமது தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளிலும் பொது உறுப்பினர் கூட்டத்தை சிறப்புற நடத்திய செயலாளர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நெஞ்சார்ந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.

இரங்கல் தீர்மானம் : முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கி மறைந்த மாண்புமிகு. முரசொலிமாறன் அவர்களின் சகோதரரும் தலைவர் கலைஞர் அவர்களின் மருமகனும், கழக நாளேடான “முரசொலி” இதழின் ஆசிரியராகவும், கழக தொண்டர்களின் நன்மதிப்பையும் பெற்ற திரு “முரசொலி” செல்வம் அவர்களின் மறைவிற்கு இச்செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

 கூட்டத்தில் கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா பகுதிகழகச் செயலாளர் மோகன் மாநில, மாவட்­ட, மாநகர கழக நிர்­வா­கி­கள், தலை­மைச் செயற்­குழு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், மாந­கர, பகுதி, ஒன்றிய, நகர, மற்­றும் பேரூர் செய­லா­ளர்­கள், மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள், உள்ளாட்சி அமைப்புகளின் சேர்மன்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *