தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்-27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது .
இதற்காக பல்வேறு இடங்களில் நூதன முறையில் பல்வேறு போஸ்டர்கள், அறிவிப்புகள் ஓட்டப்பட்டு பேசும் பொருளாக இருந்து வருகிறது .
மேலும் இந்த மாநாட்டிற்கு கர்ப்பிணி பெண்கள் சிறுவர்கள் வர வேண்டாம் என தலைவர் விஜய் அறிக்கையை வெளியிட்டிருந்தார் .
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழகத்தில் மாபெரும் வெற்றியடைய வேண்டி திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் வெற்றி, ரமேஷ், அச்சு ஆகியோர்களின் ஏற்பாட்டில் திருச்சி இரட்டைமலை வண்டி கருப்பண்ணசாமி கோவிலில் கிடா வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments