திருச்சி சமயபுரம் கோவிலில் அரசு சார்பில் இலவச திருமண விழாவில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு கலந்துகொண்டு 29 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று 29 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. விழாவில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசைகள் புதுமண தம்பதிகளுக்கு சமயபுரம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் இணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments