திருச்சி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தளம் பச்சமலையாகும். கிழக்கு தொடர்ச்சி மலை தொடர்களில் முக்கியமானதாக இருக்கும் இந்த பச்சமலையில் அருவிகள், காட்சிமுனைகள் என பார்ப்பதற்கு இடங்களும் இருப்பதால், திருச்சிக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனாலும் இங்கு தங்குவதற்கு அரசு விடுதியை தவிர வேறு வசதிகள் இல்லை, அதேபோல பொழுதுபோக்கவும் பெரிய வசதிகள் இல்லாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் மூலம் டோம் வடிவிலான தங்குமிட வசதி மற்றும், ஜிப் லைன் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தை நிறுவவுள்ளனர்.
இந்த வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இந்த வசதிகளை மேம்படுத்தவுள்ளனர். இதற்காக பச்சைமலையில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி என்ற ஊரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் மேற்கூறியுள்ள வசதிகளை நிறுவுவதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments