திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள நெய்குளம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் கொத்த னார். இவரது மகள் கிருஷ்ண வேணி (18). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கிருஷ்ணவேணி பெற்றோரிடம் கடந்த சில நாட்களாக கூறி வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக, கிருஷ்ணவேணியின் தாய் – தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த கிருஷ்ணவேணி தன்னால் தானே பெற்றோர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என நினைத்து எலிபேஸ்ட் சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments