திருச்சி கருமண்டபம் பால்பண்ணை பகுதியில் டிரான்ஸ்பார்மில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக மின் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது டிரான்ஸ்பார்மில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்த மணப்பாறையைச் சேர்ந்த முத்துக்குமார் (27) என்ற மின் ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் நிலைகுலைந்த அவர் டிரான்ஸ்பார்ம் மீது மயங்கி விழுந்தார். இதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அலறிக் கூச்சலிட்டனர். பின்னர் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு டிரான்ஸ்பார்ம் மீது இருந்த ஊழியரை கீழே இருக்கும் முயற்சியில் சக ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் காயமடைந்த மின்சார ஊழியரை பத்திரமாக கீழே இறக்கி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் முத்துக்குமாரின் இரண்டு கால்களும் கருகிவிட்டன. இதுகுறித்து மின்சார வாரியம் மற்றும் கண்டோண்மென்ட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments