திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் நடைபெற்ற சட்டவிரோத பொருட்கள் கடத்தலுக்கு எதிராக சிறப்பு இயக்கம் இன்று (29.10.2024), தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில்
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது வழிகாட்டுதலின் படி திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் தலைமையில் குற்றம் தடுப்பு & கண்டறிதல் குழு மற்றும்
ஸ்ரீ.கே.விஸ்வநாதன், SSI/NIB/CID/திருச்சி ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளி ரயில் வளாகத்தில் ToPB, சட்டவிரோத பொருட்கள் கடத்தல் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம் போன்றவற்றுக்கு எதிராக சிறப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
இந்த இயக்கத்தின் போது, திருச்சி ரயில் நிலையம் பிளாட்ஃபார்ம் எண்.5க்கு வந்தபோது T.No.12663 HWH-TPJ இன் முன் GS கோச் எண்.195530 இல் 01.200 கிலோ (ஒரு மூட்டை) கஞ்சாவைக் கொண்ட பேன்ட் துணியை கண்டெடுத்தனர் அதன் மதிப்பு ரூ.22,000/-. விசாரணையில் அந்த பையை யாரும் வாங்க முன்வரவில்லை. தேவையான சட்ட நடவடிக்கைக்காக மேலே கண்டெடுக்கப்பட்ட கஞ்சாவுடன் பேன்ட் துணியும் ஸ்ரீ.கே.விஸ்வநாதனிடம், SSI/NIB/CID/TPJவிடம் ஒப்படைக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments