(Vigilance awareness week) (28.10.2024) முதல் (03.11.2024)-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டதின்படி, திருச்சி மாநகரில் பொதுமக்கள், மாணவ மாணவியர்களிடம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
இன்று (29.10.2024)-ந் தேதி கருமண்டபம், திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள SRV Public பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இவ்ஊர்வலத்தினை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை, காவல்துறை தலைவர் லலிதாலெட்சுமி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, கலந்து கொண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்கள்.
மேற்கண்ட விழிப்புணர்வு ஊர்வலமானது பள்ளி நுழைவு வாயிலில் தொடங்கி, தீரன்நகர் பேருந்து நிறுத்தம், கோரையாறு மேம்பாலம், சோதனை சாவடி எண்:1 வரை சென்றடைந்து திரும்பி கோரையாறு மேம்பாலம், தீரன்நகர் பேருந்து நிறுத்தம் வழியாக வந்து மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்து நிறைவு பெற்றது.
மேற்கண்ட ஊர்வலத்தில் SRV Public பள்ளி சார்பாக ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் உட்பட 300 நபர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments