தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எனது திருச்சி தொகுதி மக்களின் பயண சிரமத்தை குறைக்கும் நோக்கில், இரண்டு முறை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு நான் கோரிக்கை வைத்த நிலையில், முன்பதிவில்லா இரண்டு சிறப்பு இரயில் சென்னை – திருச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் சிதம்பரம் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் என்றும், இரவு 12:30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் அரியலூர் வழியாக திருச்சிக்கு இன்னொரு இரயில் இயக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சி!
அதுபோலவே, சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கும் சிறப்பு இரயில் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்க வேண்டும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments