திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இரசாயனம் இல்லாத உணவை நாமே உற்பத்தி செய்து விவசாயிகள் பயன்பெறும் விதமாக இயற்கை விவசாயம் பற்றிய ஒரு நாள் பயிற்சி (05.11.24) அன்று நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் இயற்கை விவசாயம், இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள், இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 0431-2962854, 91717 17832 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்றோம்
மேலும் 91717 17832 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமோ, குறுஞ்செய்தி மூலமோ (04.11.24)க்குள் முன்பதிவு செய்யவும் என சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜாபாபு தெரிவித்துள்ளார்..
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments