திருச்சி அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்களின் நியாயமான பிரச்சனைகளைத் தீர்க்க தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் ஒரு நாள் இரவு உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் பாரதிதாசன் தொழிநுட்ப வளாகத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு தொடங்கி இரவு வரையிலும் அறவழியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்து உள்ளது.
அதுபோல் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் நீண்டகால பிரச்சனைகளில் கவனம் செலுத்தி உடனடியாக தீர்க்க வேண்டி சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டத்திற்கான முன்வைக்கும் கோரிக்கைகள் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் முன்பிருந்த திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் முறையாக நியமிக்கப்பட்ட 20 ஆசிரியர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாமலும், எந்தவிதமான ஊதிய பயன்களும் இல்லாமல் பணியாற்றுவதால் அவர்களின் உரிமையை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து நிலுவையிலேயே உள்ள பணி உயர்வுத் திட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான பணி உயர்வுத் திட்டம் தாமதப்படுத்தப்படுகின்றது. இது ஆசிரியர்களின் வளர்ச்சியையும் மனநிலையையும் பாதிக்கிறது என தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர். ஆர். பிரபாகரன் மற்றும் செயலாளர் டாக்டர் ஆர். உதயகுமார் ஆகியோர் இந்த தீராத பிரச்சனைகள் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பருவங்களில் இருந்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல முறை கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், அந்த மனுக்களுக்கு எவ்வித பதிலும் இல்லை என்பதால், தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது நடவடிக்கைகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் முறையான பதில் அளிக்கும் வரையிலும் இந்த உள்ளிருப்புப் போராட்டம் கல்லூரி வளாகத்தினுள் அறவழியில் பலகட்டங்களாகத் தொடர்ந்து நடைபெறும். மேலும் உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளை சங்கம் வலியுறுத்தும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments