திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வங்கி கடன் பெற்று கார் வாங்கியதாகவும், ஒரு சில மாதம் வங்கி கடன் செலுத்தாத நிலையில் விவசாய இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வங்கி அதிகாரிகள் அபகரித்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.
இது குறித்து புகார் அளித்தும் துறையூர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று அய்யா கண்ணு தலைமையில், விவசாயிகள் துறையூர் காவல் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட 61 பேர் மீது அனுமதி இன்றி கூட்டம் கூடுதல் பொது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் துறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments