திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மங்கமாள்புரம் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப நபர்கள் யாரேனும் இயற்கை எய்தும் பட்சத்தில் அந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இலவச சேவை தொடக்க விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா அருண்காந்தி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் இறுதி சடங்கிற்கு தேவையான இறுதிஊர்வல வாகனம், குளிர்சாதன பெட்டி, நாற்காலிகள், பந்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவி சொந்த செலவில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவி கூறுகையில்…. மங்கம்மாள்புரம் ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவச சேவையாக இறுதி ஊர்வலத்திற்கு தேவையான சொர்க்கரதம், சாமியான பந்தல், ஃப்ரீசர் பாக்ஸ் உள்ளிட்டவர்களை வழங்குகின்றோம். ஏனென்றால் இறப்பு என்பது இயற்கையாக திடீரென்று நடக்கின்ற ஒன்றாக இருக்கிறது. தனது குடும்பத்தில் யாரேனும் இறந்து விட்டால் அந்த குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் துக்கம் தலைக்கு மேல் இருக்கும்.
மேலும் அந்த துக்க வீட்டில் பணம் தேவை அதிகமாக இருக்கும். கடனை வாங்கியாவது இறுதிச் சடங்கு நடத்தி முடிக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுண்டு. அதனால் அந்த குடும்பத்தில் ஒருவராக இருந்து இதனை செயல்படுத்த வேண்டும் என நினைத்து இந்த சேவையை தொடங்கியுள்ளோம்.
இந்த சேவை என்பது எனது பதவி காலம் இருக்கும் வரை மட்டுமல்லாமல் எனது இறுதி காலம் வரை இந்த சேவை தொடரும். ஒவ்வொரு துக்க வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் சூழ்நிலை பார்த்து எங்களுக்கு தோன்றியதால் இந்த சேவையை தொடங்கி இருக்கிறேன்.
நான் இருக்கும் வரை இந்த சேவையை செயல்படுத்துவேன், எனக்கு பிறகு எனது குடும்பத்தினர் அல்லது தன்னார்வலர்கள் இந்த சேவையை தொடர்ந்து நடத்தவும் நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments