திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் அதிகம் இருக்கக்கூடிய சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 3000 மேற்பட்ட தரைக்கடைகள் உள்ளது. இந்த தரைக்கடை வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்கி, தொடர்ந்து தேர்தல் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நீண்ட காலமாக தரைக்கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
வியாபாரிகள் அல்லாதவருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே இப்பட்டியலை முறைப்படுத்தி அடையாள அட்டை வழங்கிய பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என தரைக்கடை வியாபாரிகள் திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து மனு அளித்ததுடன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
நாளை தேர்தல் நடைபெற இருந்த நிலையில், வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக தரைக்கடை வியாபாரிகள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments