திருச்சியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (SIHMCT) நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் இறுதியாண்டு இளங்கலை பயிற்சியில் பங்குபெற்று பயிலும் மாணவர்களுக்கான வளாக வேலை வாய்ப்பு (Campus interview) இயக்கத்தை நடத்துகிறது.
நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹோட்டல் மற்றும் ரிசார்ட் செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றில் சேர இது மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
இந்த வேலை வாய்ப்பு இயக்கத்தில் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் மாணவர்களிடம் முதலில் முன் வேலை வாய்ப்பு (Pre-Placement) விவாதங்களையும், அதனை தொடர்ந்து நேர்காணல்களையும் நடத்துகின்றனர். இதில் மாணவர்களின் ஹோட்டல் செயல்பாடுகள், விருந்தினர்களுடனான உறவுகள், அலுவலக செயல்பாடுகள், உணவு மற்றும் பானங்கள் பரிமாறுதல் மற்றும் வீட்டு பராமரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் கீழ் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.
இந்த நிலையில் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (SIHMCT) நிறுவனம் CGH Earth நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. கோர்ட்யார்டு திருசிராப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விருந்தோம்பல் துறையில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்துடன் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க இந்த முன்னெடுப்பு ஒரு முக்கிய வாய்ப்பாகும், இது சிறந்த வெளிப்பாடு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு வழங்குகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments