கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் உள்ள டாஸ்மார்க் கடை ஊழியர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டாஸ்மார்க் பணியாளர் சக்திவேலின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சக்தி வேலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
புயல், வெள்ளம், கலவர காலங்களில் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். டாஸ்மார்க் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மார்க் ஊழியர்களுக்கு பணி சுதந்திரத்தை உறுதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள அரசு மதுபான குடோன் முன்பு ஏஐடியுசி டாஸ்மார்க் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் டாஸ்மார்க் பணியாளர்கள் மாற்று சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments