தமிழ்நாடு காவல்துறைக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக 3 ஆயிரத்து665 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான 7 மாத கால அடிப்படை பயிற்சி கடந்த 4ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 8 நிரந்தர காவல்துறை பயிற்சி பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மாநகரம், தர்மபுரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 330 ஆண் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு காவல்துறை பயிற்சி தலைமையக காவல்துறை தலைவர் ஜெய்கௌரி திருச்சி காவல் பயிற்சி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டதோடு இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ரோல்காளின் போது காவல் பயிற்சி பள்ளிக்கு வருகை தந்த அவர் காவலர்களிடையே கலந்துரையாடி காவல் பயிற்சிப் பள்ளியில் அவருக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் அவர்களுக்கான பணியாளை கடந்த மாதம் 27 ம் தேதி தமிழக முதல்வர் வழங்கி காவலர்களுக்கு கூறிய அறிவுரைகளை எடுத்து கூறி அதனை கண்டிப்பாக ஒவ்வொரு காவலர்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் காவல்துறை பயிற்சி காவல்துறை இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு வாழ்த்து கூறியதையும் ஜெய கௌரி காவலர்களிடையே நினைவு கூர்ந்தார்.
மேலும் காவலர்கள் சிறப்பாக பயிற்சி பெற்று ஒரு சிறந்த காவலராக உருவாக வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு காவல் பயிற்சி பள்ளியில் உள்ள பயிற்றுநர்களையும் அழைத்து அவர்களுக்கும் சிறந்த முறையில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
முன்னதாக காவல் பயிற்சி பள்ளிக்குவந்த ஜெயகௌரிகு நவல்பட்டு அண்ணா நகர் காவல் பயிற்சி பள்ளி முதல்வர் பாரதிதாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த ஆய்வின் போது காவல் ஆய்வாளர்கள் சித்ரா மற்றும் பிரான்சிஸ் மேரி ஆகியோர் உடன் இருந்தனர். காவல்துறை தலைவர் காவல் பயிற்சி பள்ளியில் முன் தகவல் இன்றி திடீரென்று ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய அறிவுரை கூறியது புதிதாக பயிற்சி பெறும் காவலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments