தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில்
திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் தலைமையில், திருச்சி ஜங்ஷனில் ஆனந்தகுமார், நிலைய மேலாளர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கார்த்திக் ராஜா, சுகாதார ஆய்வாளர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு மற்றும் Dream India மறுவாழ்வு மையம் ஒருங்கிணைப்பாளர் Sister. நிஜோஷாலினி, உடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
மேற்படி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் யாசகம் எடுப்பது குற்றமற்றது மற்றும் அவர்களுக்கு எதிராக எந்த சட்டமும் எடுக்க முடியாது என்பதால் அவர்களின் மறுவாழ்வுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments