திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் சரக்கு ஏற்றுமதியில் ரூ.544.85 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. சரக்குப் போக்குவரத்துச் சேவையில் திருச்சி ரெயில்வே கோட்டம் முதல் முறையாக 10 மில்லியன் டன் சரக்கு ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை உள்ள 257 நாட்களில் இந்த சாதனையை எட்டியுள்ளது. இதில் 7.812 மெட்ரிக் டன் நிலக்கரி ஏற்றுமதியில் செய்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 4 சதவீதம் அதிகமாகும், இரும்பு தாது ஏற்றுமதியில் 0.466 மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்டியது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 135 சத வீதம் வளர்ச்சியாகும். கொள்கலன் ஏற்றுதலில் 0.03 மெட்ரிக் டன்னை எட்டியது. முன்பைவிட இது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கூடுதலாகஉணவு தானியங்கள்.
0.818 மெட்ரிக் டன், சிமெண்ட் 0.59 மெட்ரிக் டன், உரங்கள் 0.041 மெட்ரிக் டன், மற்ற பொருட்கள் 0.24மெட்ரிக் டன் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒட்டுமொத்த மாக, இந்த நிதியாண்டில் சரக்கு ஏற்றுதலில் 3 சத வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த சரக்கு ஏற்றுமதி மூலம் திருச்சிரெயில்வே கோட்டம் ரூ.544.85 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments